72
பிரேசிலை சேர்ந்த பிரபல Influencer லுவானா ஆண்ட்ரேட் தனது கால் முட்டியில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்போது 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
29 வயதே ஆன அவருக்கு, காலில் அறுவை சிகிச்சை செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது இதயத்தை செயல்பட வைக்க எவ்வளவோ முயன்றும் பலனளிக்காததால், செவ்வாய் கிழமை காலை 5:30 மணியளவில் லுவானா உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.