123
2024ம் ஆண்டில், வேகமாக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, 2023ம் ஆண்டு முழுவதுமாக, இலங்கை வலுவான சுற்றுலா புள்ளி விபரங்களை பதிவு செய்துள்ளது.
சுற்றுலா முன்னேற்றத்தின் அடிப்படியில் விரைவாக முன்னேற்றம் கண்டுவரும் நாடுகளில் துனிசியா, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.