106
உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு டிசம்பர் 5ம் திகதியும் “உலக மண் தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தவகையில், உலக மண் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிரமதான நிகழ்வை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர் மற்றும் பச்சிலைப்பள்ளி உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பொலிஸ் திணைக்களம், இராணுவ பிரிவினர், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கண்ட இச் சிரமதானத்தில் உக்க முடியாத கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் தபால் திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச சபை, பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபைகளின் உத்தியோகத்தர்கள், பொலிஸ், இராணுவத்தினர், வர்த்தக சங்கத்தினர், சமுர்த்தி சங்கங்கள், பொது அமைப்புகள்,மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலக மண் தினத்தை முன்னிட்டு நாட்டில் பரவலாக பல பாகங்களிலும் மண் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.