பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பிரியாவிடை சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
குறித்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் வலுவான உறவுக்கு இதுவரை காலமும் பிரதமர் தினேஷ் குணவர்தன வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஆதரவு தனக்கு பின்னர் பதவியேற்கும் உயர்ஸ்தானிகருக்கும் வழங்கப்படும் என்று அவர் முழு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை கடினமான காலங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன கோபால் பாக்லேவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோபால் பாக்லே, கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து, இந்தியா-இலங்கை உறவுகளின் நாகரீக தொடர்புகள் குறித்து ஆராய்ந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.