69
முல்லைத்தீவு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள மனித
புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு
முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் இன்று (29)
உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கையின் போது 39 சடலங்களின்
எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்ட அகழ்வு
அடுத்த ஆண்டு மார்ச் மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு
நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.