81
இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்ச்சூழலில் உடனடியாக போர்நிறுத்தத்தைக் கோரி உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வார இறுதி ஆர்ப்பாட்டங்களில் வீதிகளில் இறங்கினர்.
இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, செனகல், துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய நகரங்களில் கூடிய மக்கள், இஸ்ரேல் – காஸா மீது தொடுக்கும் போரை நிறுத்தவும், இனப்படுகொலைக்கு நிதி தராதீர்கள் என்றும் பதாகைகளை ஏந்தி வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள Al-Fakhoora பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகினர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.