89
எந்தவொரு அவசரகால மருந்துக் கொள்வனவுகளும் எதிர்காலத்தில் கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழுவின் பரிந்துரைப்படியே இந்த கட்டுப்பாடு விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு அத்தியாவசிய நிகழ்வுகளுக்கு மட்டுமே அவசரகால கொள்முதலை மட்டுப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மருந்துகள் விநியோகம் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்த்தர்களினால் மாத்திரமே கொள்வனவு செய்யப்படும்.
சில மருந்துகளை வழங்க விநியோகஸ்த்தர்கள் முன்வருவதில்லை.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், பொருத்தமான மருந்துகள் இந்திய அரசாங்க முகவர் மூலமாக கொள்வனவு செய்யப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.