75
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தால் வழங்க அனுமதிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழான இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்படி தெரிவித்தார்.
மேலும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமமனது வீழ்ச்சியடைந்த தேசிய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தின் ஆரம்பமாகுமாகுமே என் தெரிவித்த அவர், குறுகிய கால இலாப நோக்கமற்றது என்றும் குறிப்பிட்டார்.