83
சீனாவில் உலகின் உயர் அதிவேகமான இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன்மூலம் MB அல்ல GB அல்ல, ஒரே நொடியில் 1.5 TB அளவுள்ள தரவுகளை அனுப்ப முடியும்.
போன்கள் வைத்திருக்கும் நம் அனைவருக்கும் இணைய சேவை அவசியமாகிறது. இப்போது நாம் 4g, 5g ஆகிய இணைய சேவைகளை இந்தியாவில் பயன்படுத்தி வருகிறோம்.
இவற்றினை Mega Bites Per Second வேகத்தில் நாம் பயன்படுத்தி வருகிறோம்.
பிராட்பேண்ட் சேவைகள் இன்னும் வேகமான செயல்திறன் கொண்டவை.
ஆனால் வெவ்வேறு நாடுகளில் இதைவிட அதிவேகமான இணைய சேவைகள் புழக்கத்தில் உள்ளது.
தற்போது சீனா மெகாபைட்களை தாண்டி ஜிகாபைட்களையும் தாண்டி டெராபைட் அளவு வேகத்தை தொட்டுள்ளது.
சிங்குவா பல்கலைக்கழகம், சீனா மொபைல், Huawei மற்றும் CERNET.com கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து இந்த அற்புதமான திட்டத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது அனைத்து சோதனைகளையும் முடித்து நவம்பர் 13ம் திகதி தொடங்கப்பட்டுள்ளது.