பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞன் அலெக்ஸின் கொலை வழக்கு
இன்றையதினம் இடம்பெறவுள்ளது.
நேற்றையதினம் இடம்பெற இருந்த குறித்த வழக்கு, பிரதான சாட்சி வருகை தராததால் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 8ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை இன்றையதினம் தொடர் விசாரணை நடைபெறும் என யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கின் போது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸார் நால்வரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நேற்றைய தினம் வழக்கு, மேலதிக விசாரணைக்கு நியமிக்கப்பட்ட நிலையிலும், மன்று ஏஅடையாள அணிவகுப்பை நடாத்த தீர்மானித்தது.
இருப்பினும், உயிரிழந்தவருடன் கைதாகி மறியலில் இருந்த பிரதான சாட்சி மன்றுக்கு சமூகமளிக்காத நிலையில், அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 8ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடத்த மன்று உத்தரவிட்டது.
இதேவேளை, தொடர் மரண விசாரணை இன்றையதினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் சார்பில் அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட 30ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.