89
உத்தர பிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் அமீர் குதுப். இயந்திர பொறியியல் (Mechanical engineering) படித்த இவர், ஹோண்டா Cars நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து வேலையில் சலிப்பு ஏற்பட்டதால், அதனை விடுத்து MBA படிக்க முடிவு செய்தார் அமீர்.
ஆனால் அவர் அதற்காக தெரிவு செய்தது அவுஸ்திரேலிய நாட்டைத் தான். ஆனால் படிக்கும்போது வாழ்வாதாரத்திற்கு என மற்ற மாணவர்களை போல எதேனும் வேலை செய்ய வேண்டும் என எண்ணினார்.
அதற்காக அவர் 300 இடங்களில் விண்ணப்பித்தார். ஆனால் எந்த பயனும் இல்லை.
எனினும் தனது முயற்சியை கைவிடாத அமீர், விமான நிலையத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராகவும், இரவில் செய்தித்தாள்களை விற்பனை செய்வதையும் செய்தார்.
இந்த நிலையில் தான் எலான் மஸ்க், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோரால் அமீர் ஈர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நிறுவனங்களின் தேவைகளை கூர்ந்து கவனித்து வந்த அமீர்,
2014 ஆம் ஆண்டில் ஒரு கேரேஜில் தனது Enterprise Monkey நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் தொழில் தரநிலைகளை மறுவரையறை செய்யும் அதிநவீன மென்பொருள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், Web மற்றும் மொபைல் ஆப்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்றது.
படுவேகமாக வளர்ந்த இந்த நிறுவனம் கடந்த 2022-23 நிதியாண்டில் சுமார் 9.5 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
இதன்மூலம் சர்வதேச அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக Enterprise Monkey மாறியுள்ளது.
மேலும் அமீர் தற்போது 8 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அமீர் முதலீடு செய்துள்ளார்.
பகுதிநேர வேலைக்காக போராடிய அமீர், தனது விடாமுயற்சியால் தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாக உருவெடுத்துள்ளார்.