146
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர், துபாயில் நல்ல வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலுவாவின் காடுபடம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரீப்.
28 வயதான அஜ்மல் இன்ஸ்டாகிராம் தளத்தில் 14,000க்கும் பின்தொடர்பாளர்களை கொண்ட பிரபலமாவார்.
இவர் துபாயில் வசித்தபோது ஒரு நல்ல வேலை கிடைக்க போராடியுள்ளார்.
எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைக்காமல் போகவே அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
அஜ்மல் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
பின்னர் அவர் தூக்கில் தொங்கியுள்ளார். அவரை, அருகில் ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியாமல் போனது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று காலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்த செயல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.