96
அமெரிக்காவின் மாகாணம் ஒன்றின் செனட்டர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் போட்டியிடவுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் மாகாணத்தின் 22வது பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா ரெட்டி போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே செனட்டராக பதவி வகிக்கும் இவர், தனது பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக மீண்டும் 2024 ஜனவரியில் போட்டியிட உள்ளார்.
டாம் ஹேக் என்பவர் பதவி விலகிய நிலையில், குடியரசு கட்சியின் சார்பில் செனட்டராக உஷா பதவி ஏற்றார்.
இதுகுறித்து கூறிய அவர், “2024 கான்சாஸ் மாகாணத்தின் செனட்டர் பதவிக்கு தாக்கல் செய்திருக்கிறேன். பொதுசேவை என்பது வாழ்வின் ஒரு பகுதி. ஒரு செனட்டராக, அர்ப்பணிப்புடன் எனது பணியை தொடர்வேன்” என்று கூறியுள்ளார்.
உஷாவின் குடும்பம் 1973இல் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இருந்து அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திற்கு குடிபெயர்ந்தனர்.
பள்ளி ஆசிரியரான இவர் 10 ஆண்டுகள் மன்ஹாட்டன் நகர ஆணையத்தில் பணியாற்றினார்.
மேலும், இரண்டு முறை இவர் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.