Home » ஏப்ரலில் வெளியாகும் அரண்மனை பாகம் – 4

ஏப்ரலில் வெளியாகும் அரண்மனை பாகம் – 4

by namthesamnews
0 comment

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதன் வெற்றி காரணமாக, ‘அரண்மனை-2’ திரைப்படத்தை 2016-ல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து சுந்தர்.சி இயக்கினார். அந்த படமும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, 2021-ல் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தை இயக்கினார். அப்படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00