Home » ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!

by namthesamnews
0 comment

கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகவே ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பது ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம்தான். இருவருக்கும் சமீபமாக பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்று தொடர்ந்து பேசப்படுகிறது.

ஆனால் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இந்த விவகாரம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்தவர் ஜெயம் ரவி. தான் உண்டு, தனது குடும்பம் உண்டு, வேலை உண்டு என்று இருப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

அவரது மாமியார் தயாரித்திருந்த அந்தப் படம் முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் கடந்து சென்றது. பெரிய ஹிட் இல்லாவிட்டாலும்; நஷ்டம் எதுவும் இல்லை என்ற நிம்மதியோடு இருந்தார்கள் ஜெயம் ரவியும், அவரது மாமியாரும்.

சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாகவே ஒரு பிரச்னை பேசப்படுகிறது. அதாவது ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் வாக்குவாதமாக ஆரம்பித்த மனஸ்தாபம் இப்போது பெரும் சண்டையில் வந்து நிற்கிறது என்றும்; கூடிய சீக்கிரமே இரண்டு பேரும் விவாகரத்து முடிவை அறிவிக்கவிருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே இதுவரை அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இருவருக்குமான சண்டைக்கு இதுதான் காரணம் என பல யூகங்கள் பலரால் கிளப்பிவிடப்படுகின்றன.

அதன்படி, அடுத்த படத்துக்கு தனது மாமியாரிடம் 25 கோடி ரூபாய் சம்பளமாக ஜெயம் ரவி கேட்டதாகவும்; ஆனால் அதற்கு சுஜாதா (ரவியின் மாமியார்) ஒத்துக்கொள்ளவில்லை; அதனால் சண்டை என ஒருதரப்பினரும்; சுஜாதா ஒரு மகனை வளர்த்துவருகிறார். அவருக்கும் ரவிக்கும் ஆரம்பித்த ஈகோ பிரச்னை இப்போது ரவி – ஆர்த்தி சண்டையாக மாறியிருக்கிறது என்று ஒருதரப்பினரும் தொடர்ந்து கூறுகிறார்கள்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00