Home » இயக்குநர் ஷங்கர் மகளுக்கு இரண்டாம் திருமணம்!

இயக்குநர் ஷங்கர் மகளுக்கு இரண்டாம் திருமணம்!

by Vaishnavi S
0 comment

பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

‘முதல்வன்’, ‘இந்தியன்’ என தனது பிரம்மாண்ட படைப்பு மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர்.

தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கனடா என பல மொழிகளிலும் படம் எடுத்து பிசி இயக்குநராக உள்ளார்.

திரையுலகில் கலக்கி வரும் ஷங்கருக்கு, நிஜவாழ்க்கையில் அந்த அளவிற்கு மகிழ்ச்சி இல்லை என்றே கூறலாம். ஏனெனில், அவரது மூத்த மகள் ஜஸ்வர்யாவிற்கு கடந்த 2021ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த 6 மாதத்தில் ரோஹித் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இதனால், ஐஸ்வர்யா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யாவுக்கு, இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான தருண் கார்த்திகேயனுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00