326
சில்ஹெட் டெஸ்டில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சதம் விளாசினார்.
நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் (Sylhet) நேற்று தொடங்கியது.
முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 310 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹசன் ஜோய் 86 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
லாதம் (21) மற்றும் கான்வே (12) குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
இது அவருக்கு 29வது டெஸ்ட் சதம் ஆகும். 104 ரன்கள் எடுத்த வில்லியம்சன் டைஜுல் இஸ்லாம் ஓவரில் போல்டு ஆனார்.
நியூசிலாந்து அணிக்கு டைஜுல் இஸ்லாம் பந்துவீச்சு அச்சுறுத்தலாக இருந்தது.
எனினும் டேர்ல் மிட்செல் 41 ரன்களும், பிலிப்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்தின் டைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
1 comment
[…] நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின் தனது மனவேதனை குறித்து […]