78
இந்திய அணிக்கு எதிராக தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் கருத்து தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தோல்வியால் 7 முறை அரையிறுதி, 2 முறை இறுதிப் போட்டியை சந்தித்த நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவு இன்னும் தொடர்கிறது.
அணியின் வெற்றிக்காக போராடிய கேன் வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார்.
போட்டிக்கு பின்னர் பேசிய அவர், ‘ இந்திய அணிக்கு வாழ்த்து கூறிக் கொள்கிறேன். இந்திய அணி மிகச் சிறந்த அணி. இந்த தொடர் முழுவதும் சிறந்த கிரிக்கெட்டை ஆடியிருகிறார்கள்.
இன்றைய (நேற்று) போட்டியில் அவர்களது சிறந்த ஆட்டம் வெளிப்பட்டது.
நிச்சயம் நாங்கள் நாக் அவுட் போட்டிகளுடன் வெளியேறுவது ஏமாற்றம் அளிக்கிறது.
கண்டிப்பாக இந்திய அணிக்கு சவால் அளித்தோம். அதே போல் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன்.
வான்கடே மைதானத்தில் மிகச் சிறந்த ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் கொஞ்சம் ஒரு தலைபட்சமாக இருந்தார்கள் ‘ என கூறினார்.