83
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நடந்தது.
டாசில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய வீரர்களில் மேத்யூ ஷார்ட் 13 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய இங்கிலிஸ் ருத்ர தாண்டவம் ஆடினார்.
மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஸ்டீவன் ஸ்மித் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
எனினும் வாணவேடிக்கை காட்டிய இங்கிலிஸ் 8 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 50 பந்தில் 110 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 208 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கெய்க்வாட் (0) ரன் அவுட் ஆக, ஜெய்ஸ்வால் அதிரடியாக 8 பந்தில் 21 ரன்கள் விளாசினார். அதனைத் தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த சூரியகுமார் 42 பந்துகளில் 80 ரன்களும், இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்களும் குவித்தனர்.
அவர்களின் விக்கெட் இழப்பிற்கு பின் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, ரிங்கு சிங் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க, இந்திய அணி 19.5 ஓவரில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய தரப்பில் தன்வீர் சங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
Image credits: Shahbaz Khan/AFP
2 comments
[…] லெஜண்ட் கிரிக்கெட் தொடரில் ஜமைக்காவின் சாட்விக் […]
[…] ஐபிஎல்லில் CSK அணிக்காக விளையாடும் வீரர்களின் சம்பளம் […]