Home » இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!

by namthesamnews
0 comment

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், நிழல்கள் ரவி, நெடுமுடி வேணு, கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்த இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. தேசிய விருதுகளை அள்ளிய அந்த படத்தின் அடுத்த பாகம் 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2வாக நாளை வெளியாகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் வழக்கம்போல சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்தியன் 2 திரைப்படம் காலை 9:00 மணிக்கு வெளியாகிறது. ஆனால், பெங்களூர், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா என மற்ற பகுதிகளில் அதிகாலை 6:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியாகின்றன.

இந்தியன் தாத்தாவான சேனாபதியின் ஜர்னி வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு கடைசி நேர புரமோஷனை அதிகரித்துள்ளது.

மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த சைனீஸ் மாஸ்டர் 120 வயதிலும் பறந்து பறந்து சண்டை போடுகிறார் என்பதை படத்திலேயே ஷங்கர் வைத்திருக்கும் காட்சிகள் நேற்று வெளியான நிலையில், அடுத்ததாக முதல் பாகத்தில் சேனாபதியின் பயணம், நேதாஜி அணியில் செயலாற்றியது உள்ளிட்ட காட்சிகளை காட்டி கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00