87
இலங்கையில், நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களுக்கு பொருத்தமான ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் ஓய்வுபெற்றமையால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு தகுந்த ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளின் கீழ் காணப்படும் பாடசாலைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படும் பாடசாலைகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அடுத்த பாடசாலை தவணையின் போது, இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டது எனவும்
இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.