பிக்பாஸில் இன்றைய எவிக்சனில் விஜய் வர்மா வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 21வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
முதல் வாரத்தில் அனன்யா எவிக்ட் ஆனார். தொடர்ந்து சில தினங்களிலேயே பவா செல்லதுரை போட்டியிலிருந்து விலகிய நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் விஜய் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
முன்னதாக வோட்டிங்கில் கடைசியாக இருந்தது அக்ஷயா மற்றும் வினுஷாதான். ஆனால் தன்னுடைய செயலால் தற்போது விஜய் எலிமினேட் ஆகியுள்ளார்.
இதனிடையே இந்த வாரம் கேப்டனாக இருந்த யுகேந்திரனின் செயல்பாடு குறித்தும் இணையத்தில் விவாதங்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.