84
இருவேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 52 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
அதேவேளை, அனுராதபுரம் மாவட்டம், மதவாச்சி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 48 வயதுடைய வயல் காவலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
மேற்படி இரு சம்பவங்களும் நேற்று (26) இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரினதும் சடலங்களும் அந்தந்த பிரதேச வைத்தியசாலைகளில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.