76
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெரோக் ஆகியோரை சந்திப்பார் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில் உயிரிழந்து வரும் பலஸ்தீனியர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர், மேலும் மோதலை அதிகரிக்க விடாமல் தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
காஸாவிலுள்ள பலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் விஜயத்தினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.