![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/10/pen-drugs.jpg)
இந்த நாட்களில் போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அழைத்துச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதல் பார்வையில், இது ஒரு பேனா, ஆனால் அதை அகற்றி கவனிக்கும் போது, அதில் ஒரு போதை சிகரெட் உள்ளது, இது மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனனர்.
காலியை அண்மித்த பகுதியிலுள்ள பயிற்சி வகுப்பொன்றில் இவ்வாறான பேனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.