79
லண்டனில் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆதரவு பேரணி நேற்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆதரவு பேரணியில் பலஸ்தீனத்திற்காக ஆதரவு தெரிவித்து முழக்கமிட்ட மக்கள், கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளையும் ஏந்தியிருந்தாக கூறப்பட்டுள்ளது. மேலும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.
பெண்ணொருவர் ,”பாலஸ்தீன நாட்டவரான தாம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன்.காஸாவில் குடும்பத்தினர் உள்ளனர். பாலஸ்தீன விடுதலை தொடர்பில் தீவிர நடவடிக்கை தேவை.தற்போதைய சூழலில் பேரணி ஒன்றே தீர்வாக உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.
100,000 பேர் வரை கலந்து கொண்ட இந்த இப்பேரணியில் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கம் அதிகமாயிருந்தது. தடை செய்யப்பட்ட ஹமாஸ் குழு
மேலும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் படங்கள் போர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தடை செய்யப்பட்ட ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றச்செயல் என குறிப்பிடப்பட்டிருந்த போதும், இந்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 100,000 மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்ட போதும் அமைதியான முறையிலேயே இப்பேரணி நடைபெற்றது.