76
துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (சிஎன்என்) – சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) ஆகிய நாடுகளுக்கிடையிலான கூட்டு உச்சி மாநாட்டை சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பேசிய மேற்கண்டவாறு கூறினார்.
பலஸ்தீனத்தில் நடந்து வரும் கொடூரங்கள் தொடர்பில் பேசுவதற்கும் பிரச்சினைகளை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தவும் அவசரமாக கூடுமாறு ஸவுதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் விடுத்த அழைப்பின் பேரில் மேற்படி நிறுவனங்களின் அவசரக்கூட்டம் ஸவுதி தலை நகர் ரியாதில் நடைபெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்துப்பேசிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான்,
“அளவற்ற அருளாளன் நிகரற்ற கருணையாளன், அள்ளாஹ்வின் பெயரால், அமைதி, கருணை மற்றும் ஆசீர்வாதங்கள் உங்கள் மீது உண்டாவதாக. இரண்டு புனித இஸ்தல்ங்களின் பாதுகாவலர், கிங் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் அவர்களின் சார்பாக சவூதி அரேபியாவிற்கு உங்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,
இங்கு நாங்கள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் மற்றும் ஆசியான் நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்துவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம், இது நட்பு, உறவுகளையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துகிறது.
அவர் மேலும் கூறியதாவது,
எங்கள் கூட்டம் மக்களின் நலன்களை அடையும் வகையில், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பு,இஸ்திரத்தன்மையை ஒருங்கிணைக்கும் வகையில் ஒத்துழைப்பு, கூட்டாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“நாங்கள் ஒன்றுகூடும் போது, காஸாவில் இன்று அதிகரித்து வரும் வன்முறையால் வேதனையடைந்துள்ளோம். இதன் விலை அப்பாவி பொதுமக்களால் செலுத்தப்படுகிறது. பொதுமக்களை எந்த வகையிலும் குறிவைப்பதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் பொது மக்கள் குறிவைக்கப்படக்கூடாது, சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம், போர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றோம்.
பொதுமக்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கெதிரான இராணுவப்படைகளின் தாக்குதல் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றன, மேலும், இஸ்திரத்தன்மை திரும்புவதற்கான நிலைமைகள் உருவாவதைத் தடுக்கின்றன. உறுதியளிக்கும் நிலையான அமைதியை அடைக்கின்றன.
1967ம் ஆண்டு எல்லைக்குட்பட்ட பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான நியாயமான தீர்வை எட்டுவது, அனைவருக்கும் பாதுகாப்பையும் செழிப்பையும் அடையும் வகையில் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமாகும்’’ என இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் குறிப்பிட்டார்.