92
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம் அனைத்து வகையான போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால நிர்வாக குழுவின் தலைவர் ஜகா அஷ்ரஃப்பை லாகூரில் சந்தித்த பிறகு தனது X தளத்தில் அவர் ஓய்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் “2019ம் ஆம் ஆண்டில் பாகிஸ்தானை வழிநடத்த பிசிபியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்த தருணம் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது.
களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நான் பல உயர்வுகளையும், தாழ்வுகளையும் அனுபவித்துள்ளேன்.
ஒய்ட்-பால் வடிவத்தில் முதல் இடத்தை எட்டியது வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தின் கூட்டு முயற்சியின் விளைவாகும்.
இந்த பயணத்தில் அசைக்க முடியாத ஆதரவை அளித்த ஆர்வமுள்ள பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று அனைத்து வடிவங்களில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்.
இது கடினமான முடிவு தான். ஆனால் இதை அறிவிக்க இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.
மூன்று வடிவங்களிலும் பாகிஸ்தானை பிரதிநிதிப்படுத்துவேன். இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது மனமார்ந்த நன்றி ” என்று கூறியுள்ளார்.