101
இந்திய மாநிலங்கள் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.
90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் நவம்பர் 7ம் திகதி நடைபெற்றது.
மீதம் உள்ள 70 தொகுதிகளுக்கான அடுத்தகட்ட தேர்தல் வரும் நவம்பர் 17ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.
அதேபோல் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசம் மாநிலத்திலும் வரும் நவம்பர் 17ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலையுடன் முடிவடைந்தது.
அதனையொட்டி கடந்த சில நாட்களாக 2 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் திகதயன்று தேர்தல் நடைபெற்றது. மேலும், ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25ஆம் திகதியும், தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் திகதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.