136
வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் 5 வண்ணங்கள் கொண்ட Themes-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல்களை பரிமாறிக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் தற்போது பல மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் பணப்பரிமாற்றம் வரை வாட்ஸ்அப் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் பல வண்ணங்கள் உடைய புதிய Themes-ஐ அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்காகபச்சை, நீலம், வெண்மை, பவளம் மற்றும் ஊதா ஆகிய ஐந்து வண்ணங்களை வாட்ஸ்அப் தெரிவு செய்துள்ளது.
பயனர்கள் இதில் ஏதேனும் ஒரு வண்ணத்தை தெரிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.