‘பிரேமம்’ படம் மூலம் மலையாள சினிமாவில் ரசிகர்களின் மனதை பிடித்த நடிகை சாய் பல்லவி, அதன்பின் தமிழ்,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து, தற்போது தென்ந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இப்படி பயங்கர பிசி நடிகையாக இருக்கும் இவர், தமிழ் சினிமாவில் நடிகர் அஜித், விஜய் போன்ற முக்கிய நடிகர்களுடன் இதுவரை ஒரு படங்களில்கூட நடிக்கவில்லை.
ஒருவேளை அவருக்கு இருவருடனும் நடிக்க பட வாய்ப்புகள் வரவில்லையோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால்,அப்படி ஒன்றும் இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘வாரிசு’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் படக்குழு நாடியது சாய்பல்லிவியைதானாம். ஆனால், அவர் படத்தில் தனக்கு எந்த ஒரு அழுத்தமும் இல்லை, கதை பெரிதாக இல்லை என்று நிராகரித்துவிட்டாரம்.
அதேபோல், அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் அவரைதான் படக்குழு நாடியுள்ளது. ஆனால், அதில் தனது கதாபாத்திரம் பெரிதாக இல்லை என்று நிராகரித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.