132
வட்டுக்கோட்டை பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்ஸநிகழ்வானது கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளைச் செயலாளர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் தாயக விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிராக்கிய மாவீரர்களின் பெற்றோர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி மதிப்பளிக்கபட்டது.
தொடர்ந்து முன்னாள் போராளி செழியனால் மாவீரர்களின் நினைவுரையும் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிய போசனமும் பரிமாறப்பட்டது.
மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள், உரித்துடையோர் , இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் போராளி செழியன், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை மகளிர் அணி செயற்பாட்டாளர்கள் , இளைஞர் அணியினர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.