இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையைஇ வங்கதேச வீரர் சவுமியா சர்கார் (Soumya Sarkar) முறியடித்தார்.
வங்கதேச அணி வீரர் சவுமியா சர்கார் நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 169 ரன்கள் விளாசினார். அவர் 151 பந்துகளில் 2 சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை குவித்தார்.
ஆனாலும், வங்கதேச அணி நிர்ணயித்த 292 ரன்கள் வெற்றி இலக்கினை, நியூசிலாந்து அணி 46.2 ஓவரிலேயே 296 எட்டியது. அந்த அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் (Henry Nicholls) 95 ரன்களும்இ வில் யங் (Will Young) 89 ரன்களும் விளாசி வெற்றியை நிலைநாட்டினர்.
இதற்கிடையில், சவுமியா சர்கார் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
அதாவது, நியூசிலாந்துக்கு எதிராக ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் (163) எடுத்த துணை கண்ட வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்னகத்தே வைத்திருந்தார்.
அதனை 169 ரன்கள் எடுத்ததன் மூலம் சவுமியா சர்கார் தகர்த்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த துணை கண்ட வீரர்கள்
சவுமியா சர்கார் (வங்கதேசம்) – 169
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 163*
திசாரா பெரேரா (இலங்கை) – 140
லஹிரு திரிமன்னே (இலங்கை) – 139*
மஹ்முதுல்லா (வங்கதேசம்) – 128*