132
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டியானது கடந்த 14ஆம் திகதி ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
முதல் இன்னிங்ஸின் முடிவில், வார்னரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 487 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
நான்காம் நாளான இன்று 450 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 89 ரன்களுக்கு ஆட்டபிழந்தது.
இதன்மூலம் அவுஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் நாதன் லயன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.