Home » உண்மையை மறைத்து நடந்த திருமணம்.. ஒன்றரை மாதத்தில் தற்கொலை!

உண்மையை மறைத்து நடந்த திருமணம்.. ஒன்றரை மாதத்தில் தற்கொலை!

by namthesamnews
0 comment
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரியின் கொட்டாரம் பகுதியில் உள்ள மேலத்தெரு மந்தவிளையை சேர்ந்தவர் நடராஜன் (37). இவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவருக்கும் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த காயத்ரி (32) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கடந்த 11ஆம் திகதி நடராஜன் தனது உடல் நலம் சரியில்லாமல் இருந்த தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தபோது காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனைக் கண்டதும் அலறிய நடராஜனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.
பின்னர் காயத்ரியை அவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவலர்கள் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்ரியின் பெற்றோர் குறித்த தகவல்கள் தெரியாமல் இருந்து வந்துள்ளது.
அவர் காப்பகத்தில் தங்கி இருந்தபோது நெருங்கிய தோழியின் வீட்டிற்கு செல்வார்‌. அந்த பழக்கத்தில், தோழியின் தந்தை மூலமாக நடராஜனுடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின்போது தனக்கு பெற்றோர் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவருக்கு பெற்றோர் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
காயத்ரியின் பள்ளிச் சான்றிதழ்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெற்றோர் திண்டுக்கல்லில் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர், ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து திருமணம் செய்த விடயமும் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து காயத்ரியின் தாயார் மற்றும் தம்பி ஆகியோர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். அவர்களிடம் காயத்ரியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அவர்களிடம் காவல்துறையினர் காயத்ரி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00