2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது பாராளுமன்றத்தில் நேற்று (13) நிறைவேற்றப்பட்டு சபாநாயகர்
மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் இன்று சான்றுரைப்படுத்தினார்.
இந்நிலையில், இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க பெறுமதிசேர் வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும் 2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் நேற்று முதல் அமுலுக்கு வருகின்றன.