101
பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இந்த வருடம் தீபாவளியன்று 1 மணி நேரம் முஹூரத் சிறப்பு வர்த்தகத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது.
இந்தச் சிறப்புப் பங்குச்சந்தை வர்த்தகம் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7:15 மணிக்கு முடிவடையும்.
இதில் 15 நிமிடம் முந்தைய வர்த்தக அமர்வுகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10 சிறப்பு முஹுரத் வர்த்தக நாட்களில் 7 முறை வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.
இதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் முதலீட்டுப் பணமும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.