213
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துசெல்லப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கமராக்களின் ஊடாக பதிவாகும் காணொளிகளை, நாளாந்தம் ஆராயவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதியும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.