இதயம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் கீழ் செலுத்தப்படும் தொகையை 100 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி விண்ணப்பம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் கொடுப்பனவை செலுத்துவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏற்றுமதி பயிர்களுக்கான உரங்களின் விலைகளை குறைப்பதற்கு கமத் தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி கறுவா, தேயிலை மற்றும் தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் பல வகையான உரங்களின் விலைகளே குறைக்கப்படவுள்ளன.
விவசாய அமைச்சரின் உத்தரவு இந்த உரங்களின் விலைகளை 1500-2000 ரூபாவால் மேலும் குறைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று (17) அரச உரக் கம்பனிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.