219
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோலர் பேனல் குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளரும் அதன் சக்தி சபையின் தலைவருமான கலாநிதி லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில் சோலார் பேனல்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.