80
நவீன ஓவியத்தின் தந்தை எனப்படும் பாப்லோ பிக்காசோவின் ஒரு ஓவியம் 1,157 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
1932ல் வரையப்பட்ட “வுமன் வித் எ வாட்ச்” எனும் இந்த ஓவியம் ஒரு அற்புதமான கலைப்படைப்பாகும்.
இதனை அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த, ஓவியத்தின் மீது அதீத விருப்பம் கொண்ட, மறைந்த “எமிலி பிஷர் லாண்டவ்” 1968ல் இந்த ஓவியத்தை வாங்கி வைத்திருந்தார்.
அந்த ஓவியமே தற்போது ஏலத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக பாப்லோ பிக்காசோவின் “வுமன் ஆப் அல்ஜியர்ஸ்” ஓவியம் 2015ல் 1,148 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.