எதிர்வரும் தேசிய தேர்தல்களில் எவருடனும் கூட்டுசேர்வதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெற்றியோ,தோல்வியோ தேர்தல்களில் தனித்தே போட்டியிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாங்கள் கூட்டணியமைக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைக்கு புரம்பானது என தெரிவித்த அனுர எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் தனித்தே போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல் அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் தேர்தலை கோருகிறார்கள் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் படு தோல்வியடைய நேரிடும் என்பதை அறிந்தே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதாகவும் குற்றம் சுமத்தினார்.