97
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Fasting blood sugar, Random Blood sugar, Screening, மற்றும் BMI உடற் திணிவுச் சுட்டி ஆகிய பரிசோதனைகள் இடம்பெற்றன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வு, இன்று(6) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பரிசோதனையில் 125 இற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.
நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், தலைமை பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.