85
தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வட்டக்கச்சி பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தாயக விடுதலைக்காக தம் உயிரை நீத்த மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இம் மாதம் 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment
[…] மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – […]