70
போலி சிம்கார்டு பயன்படுத்தி நவீன விதமாக நடக்கும் மோசடியில், பெண் வழக்கறிஞர் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார் .
டெல்லியைச் சேர்ந்த 35வயதான பெண் ஒருவர் 3 முறை மிஸ்டுகால்கள் வந்த பிறகு ‘sim swap scam’ என்ற மோசடியின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
நூதன மோசடிகாரர்கள் தவறான வழியில் போலி சிம்கார்டுக்காண அணுகலை பெற்று, அதன் மூலமாக வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தை திருடி கின்றனர்.
‘ Sim swap scam’ மோசடி
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட நம்பரில் இருந்து மூன்று மிஸ்டு கால்கள் வந்துள்ளது.
அதன் பிறகு அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டத்திற்கான மெசேஜை அவர் பெற்றுள்ளார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட அந்த பெண் எந்தவிதமான OTP அல்லது தனி நபர் விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.
எனினும் அவரது வங்கி கணக்கில் இருந்த பணத்தை இழந்துள்ளார். அக்டோபர் இரண்டாம் வாரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
உடனடியாக அந்த வழக்கறிஞர் பொலிசாரிடம் புகார் செய்துள்ளார். மேலும் அவர் தனக்கு மொத்தமாக மூன்று மிஸ்டு கால்கள் வந்தது என்றும், போன் வந்த அந்த நம்பருக்கு வேறொரு நம்பரில் இருந்து போன் செய்தபோது, அது ஒரு கொரியர் டெலிவரிக்காக செய்யப்பட்ட போன் கால் என்று சொல்லப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது நண்பரிடம் இருந்து தனக்கு ஒரு பேக்கேஜ் வர உள்ளதை நம்பி அவர் தனது வீட்டு முகவரியை அந்த மோசடிக்காரர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அவர்கள் கூறியது போலவே ஒரு பேக்கேஜையும் பெற்றுள்ளார். அதன் பிறகு தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விடயம் மெசேஜ் மூலமாக தெரிய வந்ததாக கூறியுள்ளார். இவர் எந்த விதமான வங்கி தொடர்பான விவரங்கள் OTP அல்லது பாஸ்வேர்ட் போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும் இவரது வங்கி கணக்கில் இருந்து இவரது அனுமதி இல்லாமல் லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது இந்த பெண் இதுவரை பயன்படுத்தாத வெப்சைட்டுகள் அவரது பிரவுசர் ஹிஸ்டரியில் தென்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அவருக்கு பிஷ்ஷிங் லிங்குகள் மற்றும் பிற UPI ரெஜிஸ்ட்ரேஷன் டெக்ஸ்டுகளையும் பெற்றுள்ளார்.