111
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தங்கள் பயணிகளின் விமானப் பயண அனுமதிக்கான Self Check-in மற்றும் Self-Bag-Drop Services சமர்ப்பிப்பதற்கான சுயசேவை வசதிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் விமான நிலைய நடவடிக்கைகளை சௌகரியமாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க சிறப்பாக வழிவகுக்கிறது.
நெரிசலான சந்தர்ப்பங்களில் காத்திருப்புநேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சுய-சேவை பயணிகள் செக்-இன் செயன்முறையின் மூலம் தடையின்றி செல்லவும், விரைவாக குடியகல்வு செயற்பாடுகளுக்குச் செல்லவும் அனுமதிக்கிறது.
பயணிகள் இப்போது விமான செக்-இன், இருக்கை தெரிவு மற்றும் போர்டிங் பாஸ்கள் மற்றும் பொதிகளுக்கான ரக்களை அச்சிடுதல் உள்ளிட்ட முழு செக்-இன் செயன்முறையையும் சுயமாகமேற்கொள்ளமுடியும். இதனைத் தொடர்ந்து, அவர்கள் தங்களுடைய பொதிகளை சிரமமின்றி செல்ப்-பேக்-டிராப் வசதியில் வைக்கலாம், இதன் மூலம் குடியகல்வு அனுமதிக்கு பின்னர் போர்டிங் பகுதிக்கு நேரடியாகச் செல்லலாம்.