81
பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடலில் மீன்பிடிக்கும் போது சில சமயங்களில் எல்லை தாண்டிப் போய் விடுவதுண்டு. அதற்காக பாகிஸ்தான் அரசால் கைதும் செய்யப்படுவர்.
இந்நிலையில் இன்று கராச்சியின் லாண்டி சிறையிலிருந்து 80 மீனவ சிறைவாசிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது.
அப்படி விடுவிக்கப்பட்டால் நாளை வாகா வழியாக இந்தியா அனுப்பிவைக்கப்பட்டு, இந்த தீபாவளியை அவர்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் “நவாஸ் ஷெரீப்” 2014ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில், 151 இந்திய மீனவர்களை விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.