69
இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அது நாளை கடுமையான சவால்களை தரக்கூடும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை தொடர் இப்போது அரையிறுதியை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
நாளை (புதன் கிழமை) நடக்கப்போகும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணியுடன் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது.
லீக் ஆட்டங்களில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அசுர பலத்துடன் இந்திய அணி உள்ளது.
நியூசிலாந்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்து வந்ததாலும் இடையில் சறுக்கல்களை எதிர்கொண்டு மீண்டு வந்தது.
அரையிறுதி மற்றும் இறுதி போட்டி மழை உள்ளிட்ட காரணங்களால் தடைபட்டால், அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாள் Reserve day என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் போட்டி குறித்து கூறுகையில், ‘இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது, இந்திய அணியுடனான போட்டி மிகவும் கடினமான சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
சில தோல்விகள் மற்றும் சில வெற்றிகளுடன் நாங்கள் நன்றாக விளையாடினோம். எனவே வரவிருக்கும் சவாலை எதிர்கொள்ள நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்.
பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. சொந்த மண்ணில் இந்தியாவிற்கு எதிராக உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடுவது சிறப்பான ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் நியூசிலாந்தின் முன்னாள் வீரரான ராஸ் டெய்லர், நாளைய போட்டியில் இந்திய அணி பதற்றத்துடன் காணப்படும் என கூறியுள்ளார்.
1 comment
[…] ஓடும்போது ரன் அவுட் செய்யப்பட்டார். நியூசிலாந்தின் மார்டின் கப்தில் (Martin Guptill) அடித்த […]