97
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி கடந்த ஆகஸ்டு மாதம் ரிலையன்ஸ் ரீடெய்ல் தலைவராக பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் நிறுவனம் கிடுகிடுவென மார்க்கெட்டில் வளர்ச்சி பெற தொடங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி மறைவுக்கு பிறகு அவரது வாரிசுகளான முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
இறுதியில் ஒரு வழியாக அவரது தாயார் கோகிலா பென் தலையிட்டு சொத்துக்களை சரி சமமாக பங்கிட்டு பிரச்சினையை சுமூகமாக முடித்து வைத்தார்.
எனவே, இதுபோன்ற மனக்கசப்பான பிரச்சினைகள் தனது வாரிசுகளுக்கு வர கூடாது என்று முன்னெச்சரிக்கையாக பொறுப்புகளை பிரித்து கொடுத்துவிட்டார் முகேஷ் அம்பானி.
இதனை தொடர்ந்து தான் ரிலையன்ஸ் ரீடெய்ல் தலைவராக பொறுப்பேற்றார் இஷா அம்பானி.
இந்த நிலையில் இஷா அம்பானியின் விரிவாக்க யுக்திகள் பலனால் ரிலையன்ஸ் ரீடெய்லின் மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இதன்மூலம் ரூ.18.18 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனங்களில் மிகச் சிறப்பாக செயல்படும் துணை நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடெய்ல் உருவெடுத்துள்ளது.
இதற்கிடையில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் தீரா பிராண்ட்களை தொடங்கிய இஷா, டெல்லியில் தனது புதிய ஸ்டோரை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.