105
குளிர் காலத்தில் சில்லென்ற காற்று நம்மை குதூகலமாக்கினாலும் சருமத்தை வறண்டு போகச் செய்யக்கூடும்.
ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நமது சருமத்தை நம்மால் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்த தேன் ஒரு சிறந்த ஈரப்பதமூடிட்டியாகும்.
குளிர்காலங்களில் தேன் கலந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம்.
இரவு உறங்கும் முன்பாக முகத்தில் தேனை தடவி 15 நிமிடங்களுக்கு பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
இதன்மூலம் பொலிவான பளபளப்பான சருமத்தை பாதுகாக்க முடியும்.
உதடு வெடிப்புகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணியாகும்.
கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தேய்ப்பதால் உதடுகள் வெடிப்பதை தவிர்க்க முடியும்.
தயிர் மற்றும் மஞ்சள் கலந்த ஃபேஸ் பேக் சருமத்தை பொலிவாக்கும்.
ஓட்ஸ் மற்றும் பால் சேர்த்துக் கலக்கிய ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் வறட்சி நீங்கும்.
வாழைப்பழ தோலினை கூட சரும பொலிவுக்காக பயன்படுத்தலாம்.
முகத்தை கழுவி உலர வைத்த பின்னர் வாழைப்பழ தோல் அல்லது வாழைப்பழம் மற்றும் தோல் ஆகியவற்றை மசித்து முகத்தில் தேய்த்து 10 நிமிடங்களுக்கு பின்னர் முகம் கழுவ வேண்டும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகவும்)